எதிர்கால விண்வெளித் திட்டங்களில் பங்கேற்க ஜெஃப் பெசோஸின் புளூ ஒரிஜின் நிறுவனத்திற்கு நாசா பச்சைக்கொடி
எதிர்கால விண்வெளித் திட்டங்களில் பங்கேற்க, ஜெஃப் பெசோஸின் புளூ ஒரிஜின் நிறுவனத்திற்கு நாசா பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தின் கீழ், புளூ ஒரிஜின் நிறுவனத்தின், 310 அடி நீளம் கொண்ட New Glenn கனரக ராக்கெட் நாசா விண்வெளித் திட்டங்களில் பங்கேற்க வழிசெய்யப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள் ஏவுதல், புவி ஆய்வுத் திட்டங்கள், வேற்று கிரகங்களுக்கு பயணம் ஆகியவற்றில் நியூ கிளென் ராக்கெட் 2027ஆம் ஆண்டில் இருந்து பங்கெடுக்கும்.
அடுத்த ஆண்டு, முதல் முறையாக ஏவப்பட உள்ள நியூ கிளென் ராக்கெட்டின் ரீயூசபிள் பூஸ்டரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் விண்கலங்களையும் நாசா வடிவமைக்கும்.
ஏற்கெனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டை விண்வெளித் திட்டங்களில் நாசா பயன்படுத்தி வருகிறது.
அந்த ராக்கெட்டை விட மும்மடங்கு அதிக எடையை, சுமார் 45 டன் எடையை புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு எடுத்துச் செல்லும் திறன்பெற்றது நியூ கிளென் ராக்கெட்.
Comments