தரமற்ற கையுறைகள் விற்பனை செய்து ரூ.98 லட்சம் மோசடி - கோவையில் 2 பேர் கைது
தரமற்ற கையுறைகள் தயாரித்து 98 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் பெண் உட்பட இருவர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரில் செயல்பட்டு வரும் அக்மே பிட்னஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கொரோனா பாதுகாப்புக்காக கோவை கவுண்டம் பாளையத்தில் இயங்கிவரும் புளு ஹர்ச்சிட்ஸ் நிறுவனத்திடம் கடந்த மே மாதம் ஒப்பந்தம் போட்டு 98 லட்சம் ரூபாய்க்கு கையுறைகள் வாங்கியது.
அந்த கையுறைகள் சேதமடைந்து தரமற்றதாகவும், உபயோகிக்கப்பட்ட கையுறைகளாகவும் இருந்தததுடன் பணத்தையும் திருப்பிதரவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்த புகாரில் புளு ஹர்ச்சிட்ஸ் நிறுவன தலைவர் கீதா அகர்வால் மற்றும் கூட்டாளி பாலாஜியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments