கால்வாய்களை தூர்வாரிய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்திய விவசாயிகள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரத்துக் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் சேமிக்க வழி செய்தமைக்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர்.
நீர்வரத்து வாய்க்கால்களை முறையாக தூர்வாரியதால் மழையை தொடர்ந்து பாலாறு-பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, குதிரையாறு அணை ஆகியவற்றுடன் சுற்றுவட்டாரத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தி நன்றி தெரிவித்தனர்.
Comments