லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை வளையத்தில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியனை சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு

0 3933
லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை வளையத்தில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியனை சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு

லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை வளையத்தில் சிக்கிய சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

பணி ஓய்வுக்காலத்திற்கும் பிறகும் ஓராண்டு நீட்டிப்பில் இருந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் மீது எழுந்த லஞ்ச புகாரில் சோதனை நடத்தப்பட்டது.

பாண்டியன் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றும் பாண்டியன், இதுவரை வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதிகள்  மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்த விவரங்களை திரட்ட, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பாண்டியனை பணியிடை நீக்கம் செய்து சுற்றுச்சூழல் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments