கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் சிப் பற்றாக்குறையால் மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி பாதிப்பு
கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் சிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் கார், மின்னணு சாதனங்களான டி.வி, மொபைல்போன் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அவற்றின் தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் மட்டுமின்றி, சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவேய் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாலும் சிப் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்ததை விடவும், லேப்டாப்கள், கார்கள்,5 ஜி போன்களுக்கு கிராக்கி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்கு தேவையான எட்டு அங்குல சிப்களை தயாரிக்க ஆசிய நிறுவனங்கள்போதிய முதலீடுகளை செய்யாதது இந்த துறையினருக்கு கவலை அளித்துள்ளது.
Comments