பேக்கிங் இல்லா சமையல் எண்ணெய் விற்கத் தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 17299

சமையல் எண்ணெய்களைப் சில்லறையாக விற்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிக் கலப்பட எண்ணெய் விற்பதைத் தடுக்கவும், தரமான சமையல் எண்ணெய் விற்பதை உறுதி செய்யவும் கோரி தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய்களைப் பேக்கிங் செய்யாமல் சில்லறை விற்பனை செய்ய இடைக்காலத் தடை விதித்தது.

பேக்கிங் செய்யாமல் சமையல் எண்ணெய் எவ்வாறு விற்கப்படுகிறது என்றும், எண்ணெய்யின் தரத்தை ஆய்வு செய்ய எத்தனை ஆய்வகங்கள் உள்ளன என்றும் வினவிய நீதிபதிகள் அது குறித்துப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 18ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments