சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் கணக்குகள் வைத்துள்ள வங்கிகளுக்கு லஞ்ச ஒழிப்பு துறை கடிதம்?
சுற்றுச்சூழல் துறை அதிகாரி பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள லாக்கர்களை சோதனையிட அனுமதிக்குமாறு, சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு லஞ்ச ஒழிப்பு துறை கடிதம் அனுப்பியுள்ளது.
பாண்டியன் மீது எழுந்த லஞ்ச புகாரில் அவருடைய வீடு, அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகள், 7 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கின.
லஞ்சம் பெற்றுக்கொண்டு பல நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக சுற்றுச்சூழல் அனுமதி அளித்தாக பாண்டியன் மீது லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, சென்னை மற்றும் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பல்வேறு வங்கிகளில் பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான லாக்கர்களை சோதனையிட லஞ்ச ஒழிப்பு துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Comments