சுமார் 200 மில்லியன் டாலர் செலவில் உருவாகும் ஹாலிவுட் திரைப்படம்... முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷ்

0 5352

நடிகர் தனுஷ், தி கிரே மேன் என்ற ஹாலிவுட் ஸ்பை திரில்லர் திரைப்படத்தில், கிறிஸ் ஈவன்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை இயக்கிய புகழ்பெற்ற ரஸ்ஸோ சகோதரர்கள், இந்த திரைப்படத்தை இயக்குகின்றனர்.

தி கிரே மேன் என்ற நாவலைத் தழுவி, 200 மில்லியன் டாலர் செலவில் தயாராகும் இந்த திரைப்படத்திற்கான சர்வதேச ஷூட்டிங் லொக்கேசன்கள் இறுதி செய்யப்பட்டு, லாஸ் ஏஞ்சலஸில் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

இரு சிஐஏ உளவாளிகளை சுற்றிச் சுழலும் கதையில் தனுஷ் உள்ளிட்டோரின் பாத்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. நெட்பிளிக்ஸ் ஒரிஜினலாக இந்த திரைப்படம் தயாராகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments