பிஜி தீவை சூறையாடிய யசா புயல்
பிஜி தீவை யாசா என்ற புயல் தாக்கி சூறையாடியதில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கின. நேற்று வடக்கு பிஜி தீவான வனுவா லெவு-ல் அமைந்துள்ள புவா மாகாணத்தை இந்த புயல் கரையை கடந்தது.
புயல் கொண்டு வந்த பெருமழையால் சாலைகள் ஆறாக காட்சி அளித்தன. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மேடான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
புயலை ஒரு தேசிய பேரிடராக அறிவித்துள்ள பிஜி அரசு, தனது மொத்த மக்களான பத்து லட்சம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளது.
Comments