தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையை சுமார் 45 ஆயிரம் பேரிடம் நடத்துகிறது ஜான்சன் அண்ட் ஜான்சன்
தனது சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையை நடத்த சுமார் 45 ஆயிரம் பேரை தேர்வு செய்துள்ளதாக, அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன்&ஜான்சன் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் முதற்கட்ட முடிவுகள் அடுத்த மாதம் இறுதியில் கிடைக்கும். அதன் பின்னர் வரும் பிப்ரவரி மாதம் அதற்கான அவசரகால அனுமதி கோரி அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறையிடம் விண்ணப்பிக்க உள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் ஜான்சன்&ஜான்சன் தெரிவித்துள்ளது.
ஜான்சன்&ஜான்சனின் இரண்டு டோஸ் தடுப்பூசி இறுதிகட்ட சோதனை ஏற்கனவே நடந்து வருகிறது.
J&J says late-stage COVID-19 vaccine trial fully enrolled https://t.co/6OfFDKmg0L pic.twitter.com/JYln08lXKo
— Reuters (@Reuters) December 18, 2020
Comments