வங்கிக் கடன் மோசடி தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்தது சிபிஐ
வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலம் காந்தி நகர் பேங்க் ஆப் பரோடா சார்பில் பெறப்பட்ட புகாரின் பெயரில் ஒரு நிறுவனத்தின் இயக்குனர்கள், மற்றும் பெயர் குறிப்பிடாத அரசு ஊழியர்கள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 72 கோடியே 55 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதே போன்று அகமதாபாத் ஸ்டேட் வங்கியிடமிருந்து 452 கோடியே 62 லட்சம் ரூபாய் பெற்று கடனைத்திருப்பித் தராமல் மோசடி செய்ததாக இன்னொரு வழக்கும் பதிவாகியுள்ளது.
Comments