‘காஞ்சனா’ கோடாங்கியிடம் சிக்கியவர் கொலை..! பேய் ஓட்டும் முயற்சியில் விபரீதம்
சென்னை செங்குன்றத்தில் பேயை விரட்டுவதாகக் கூறி, இளைஞரை பிரம்பால் அடித்துக் கொன்றதாக, திருநங்கை கோடாங்கியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நோயாளியிடம் காஞ்சனா போல ஆவேசம் காட்டியதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான ஆயிஷாவின் கணவர் மகபூப் பாஷா இவர் கடந்த ஜூன் மாதம் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகே இருக்கும் தர்காவில் இரண்டு நாட்கள் வைத்து பேய் பிடித்ததாக கூறி மந்திரம் ஓதி உள்ளனர்
ஆனால் அங்கு குணம் ஆகாததால் ஆயிஷாவின் உறவினர்கள் சிலரின் அறிவுறுத்தலின் படி, செங்குன்றம் அருகே உள்ள கொத்தூர் அம்மன் கோயில் அருகில் பேய் விரட்டும் தொழில் செய்துவந்த திருநங்கையான சங்கர் என்ற கோடாங்கியிடம் அழைத்துச் சென்றனர்
அங்கு மகபூப் பாஷாவை பத்து நாட்கள் தங்க வைத்து பூஜை செய்துள்ளனர்
அப்பொழுது மகபூப் பாஷாவுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி திருநங்கை கோடாங்கி சங்கர் காஞ்சனா போல ஆவேசமாகி உடல் முழுவதும் பிரம்பால் அடித்துள்ளார். இதில் பல அடிகள் மகபூப் பாஷாவின் தலையிலும் விழுந்துள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி மகபூப் பாஷாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்படவே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி ஆயிஷா வண்ணாரப்பேட்டை காவல் நிலைத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பிரேத பரிசோதனை செய்ததில் உடலில் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களால் ரத்தகட்டுக்கள் ஏற்பட்டு இருந்தது. தலையில் உண்டான ரத்தக்கட்டு மூலமாக உடலில் பல வித உறுப்புகள் செயல் இழந்து முடிவில் அவர் மூச்சுத்திணறி பலியானது தெரியவந்தது.
மகபூப் பாட்ஷாவை பேய் ஓட்டும் போது சாமியார் சங்கர் அடித்ததால் ஏற்பட்ட உள் காயத்தால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இறந்தது உறுதிசெய்யப்பட்டதால் திருநங்கை கோடாங்கி சங்கரை வண்ணாரப்பேட்டை போலீசார் 6 மாதம் கடந்து கைது செய்துள்ளனர்
முதலில் மகபூப் பாஷா மூச்சு திணறலால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டதால் அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், உலகில் இல்லாத பேயை விரட்டுவதாக பிரம்பால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அதே நேரத்தில் மகபூப் பாஷாவை முறையான மன நல மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிகிச்சை மேற்கொண்டிருந்தால் இது போன்ற விபரீத மரணத்தை தவிர்த்திருக்கலாம் என்கின்றனர் காவல்துறையினர்.
Comments