தாமிரபரணி ஆற்று மணலில் அணு சக்திக்கு தேவையான கனிமங்கள் இருப்பதாக தகவல், ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு
தாமிரபரணி ஆற்று மணலில் அணு சக்திக்கு தேவையான கனிமங்களும் இருப்பதால் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.
தூத்துக்குடி பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிரபரணி ஆற்று மணல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கனிமங்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள், எவ்வாறு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கினார்கள்? என கேள்வி எழுப்பினர். தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் அள்ள தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 21 - ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Comments