இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

0 1890

லங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.

பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 36 மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.   

இப்பிரச்சனை தொடர்பாக இலங்கையின் உயர்அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, 36 மீனவர்களையும், 5 மீன்பிடி விசைப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தை பிரதமர் உடனடியாக அறிவுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments