மார்ச் மாதத்திற்குள் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு
அடுத்த மார்ச் மாதத்திற்குள் பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட், 4 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரேசில் நாட்டின் அமேசோனியா என்ற செயற்கைகோளுடன், பெங்களூருவை சேர்ந்த பிக்சல் என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள ஆனந்த் என்ற அதி நவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக கூறினார்.
விண்வெளி துறையில் தனியார் துறையினருக்கு மத்திய அரசு அனுமதி அளித்த பின் முதன் முறையாக இந்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார். 2022 ஆம் ஆண்டுக்குள் பிக்சல் நிறுவனம் 30 சிறிய ரக புவி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது என்றும் சிவன் தெரிவித்தார்.
Comments