பள்ளிகள் திறப்பு எப்போது.? முதலமைச்சர் பதில்.!

0 123924
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோர் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, அரசு முடிவெடுக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோர் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே, அரசு முடிவெடுக்கும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில், 36 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த 39 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அண்மைகால லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை, அரசு, நேரிய வழியில் செயல்படுவதை சுட்டிக்காட்டுகிறது என்றார்.

இதனைத் தொடர்ந்து, பெரம்பலூருக்கு பயணமான முதலமைச்சர், பேரளி என்ற கிராமத்தில், காரை விட்டு கீழே இறங்கிச் சென்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது, பெற்றோரின் விருப்பதை ஏற்று, ஆண் குழந்தையை உச்சிமோர்ந்து பெயர்சூட்டினார்.

பெரம்பலூரில், சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர், 19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கொரோனா தடுப்பு பணி ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், பெரம்பலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments