ஒரே பேட்டரியில் 10 லட்சம் மைல்கள்... கனவு திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் டெஸ்லா!
ஒரே பேட்டரியில் 10 லட்சம் மைல்கள்... கனவு திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் டெஸ்லா!
உலகில் கார் நிறுவனங்கள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால், அவற்றில் பல இன்னமும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் இறங்கவில்லை. பேட்டரி விலை மற்றும் காரின் விலை நிர்ணயம்தான் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. கார்களில் இருவகைகள் உண்டு. பேட்டரியில் மட்டுமே இயங்கக் கூடியது. இன்னொன்று , பேட்டரி உதவியுடன் பெட்ரோல்-டீசலில் இயங்கக்கூடியது.
பொதுவாக ஒரு கார் 1,50,000 கிலோமீட்டர்கள் வரை ஓடும் திறன் கொண்டதாக இருக்கும்.. ஒரு வருடத்திற்கு சராசரியாக ஒருவர் 13,500 மைல்களை ஓட்டினால் அந்த கார் 13 ஆண்டுகள் வரை ஓட முடியும். தற்போது, டெஸ்லா நிறுவனம் 10 லட்சம் மைல்கள் வரை இயங்கக் கூடிய பேட்டரியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரான எலன் மாஸ்க் , 10 லட்சம் மைல்கள் வரை இயங்கும் திறன் படைத்த கார்களை டெஸ்லா நிறுவனம் உருவாக்கும் என்றும், 2020- ஆம் ஆண்டில் உற்பத்தியும் தொடங்கும் என்றும் எலன் மஸ்க் உறுதிபட கூறினார். சொன்னது போல, செப்டம்பர் மாதத்தில் டெஸ்லா நிறுவனத்தின் ஆதரவோடு கானாடாவில் உள்ள டல் ஹௌஸி பல்கலையில் மில்லியன் மைல் தரும் பேட்டரி குறித்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுப்பட்டனர். புதிய வகையான பார்முலாவைக் கொண்டு மில்லியன் மைல் பேட்டரியையும் உருவாக்கியுள்ளனர்.
மேலும் , இந்த மில்லியன் மைல் பேட்டரியில் சிங்கள் லார்ஜ் கிரிஸ்டல் முறை பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பேட்டரிக்களில் மிக அதிகளவில் நுண்ணிய படிகங்கள் பயன்படுத்தப்படும். ஆனால், இந்த மில்லியன் மைல் பேட்டரியில் சிங்கள் லார்ஜ் கிரிஸ்டல், அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட படிகங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரே ஒரு பெரிய படிகம் மட்டுமே பயன்படுத்தப்படும்.
ஆனால், சிங்கள் லார்ஜ் கிரிஸ்டல் முறை பயன்படுத்தப்பட்டால்,விரைவில் வெடிப்பு ஏற்பட்டு, பேட்டரிக்கள் செயல் இழந்து விட வாய்ப்புள்ளது. அதனால், மில்லியன் மைல் பேட்டரியில் டிஸ்சார்ஜ் சைக்கிள் முறையில் கணக்கிடப்படுகிறது . 1 டிஸ்சார்ஜ் சைக்கிள் என்பது 100% சதவிகிதம் ஒரு பேட்டரியை முழுவதுமாக பயன்படுத்துவது என்பதாகும். இந்த மில்லியன் பேட்டரியை பத்தாயிரம் முறை பயன்படுத்தினால் கூட 5% மட்டுமே அதன் சார்ஜை இழக்கும். இந்த வகை பேட்டரி லித்தியம் பேட்டரிகளை விட சிறந்ததும் என்றும் கருதப்படுகிறது.
உண்மையில் மில்லியன் மைல் பேட்டரிகள் மூலம் மக்கள் பயன் அடைவது உறுதிதான் . ஆனால் டெஸ்லா கார்களில் இந்த மில்லியன் ரக பேட்டரிகளை பயன்படுத்துவதற்கு இன்னோரு சவாலும் உள்ளது. பொதுவாக, கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிக்களில் கோபால்ட் என்ற தனிமம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. விலை உயர்ந்த தனிமமான கோபால்ட் ஆபத்தானதும் கூட. அதனால், மில்லியன் மைல் பேட்டரியில் கோபால்ட் என்ற படிமத்தையே நீக்க முயற்சிக்கிறது டெஸ்லா நிறுவனம். விரைவில் , டெஸ்லா நிறுவனம் அதற்கான வழி முறையையும் கண்டறிந்து, மில்லியன் மைல் ரக பேட்ரியை அறிமுகம் செய்யும் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.
இந்த ரக பேட்டரிக்கு சர்வதேச அளவில் அதிகப்படியான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த பேட்டரி 2021 ஆம் ஆண்டு நிச்சயம் தயாராகி விடும் என்று டெஸ்லா சொல்கிறது. இந்த பேட்டரியை தயாரித்து விட்டால், டெஸ்லா தனது போட்டி நிறுவனங்களை எழ முடியாமலே செய்து விடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Comments