விவசாயிகள் தொடர்பான மனுக்களை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு...

0 2373

போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு எதிரான பொதுநல வழக்கை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

பொதுநல வழக்கு தொடர்பான மனுவில் உள்ள அம்சங்களை படித்துப் பார்த்த நீதிபதிகள், இது பொதுநல வழக்கா அல்லது விளம்பரம் தேடும் வழக்கா? என கேள்வி எழுப்பினர்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே விசாரணை நடைபெறுவதால், இந்த மனுவை விசாரிக்க முடியாது என தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments