சபரிமலையில் நாள்தோறும் 5000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு...

0 2405
சபரிமலைக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது.

சபரிமலைக்கு தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது.

கொரோனா காரணமாக வார நாட்களில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments