அமெரிக்கா-ரஷ்யா உறவை ஜோ பைடன் மேம்படுத்துவார் - ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை
அமெரிக்கா- ரஷ்யா உறவை ஜோ பைடன் மேம்படுத்துவார் என நம்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். டிரம்ப் ஆட்சிக்காலத்தில் ரஷ்ய நிறுவனங்கள், தனிநபர்கள் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.
இதனால் இருதரப்பு உறவு பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்து ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதின், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் பிடன் நல்ல அனுபவசாலி என்றும், அவர் இருதரப்பு உறவை மேம்படுத்துவார் என நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
Comments