விவசாயிகள் இடையூறின்றிப் போராட்டம் நடத்தலாம்.. உச்சநீதிமன்றம் கருத்து..!
போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உள்ளதாகத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்காமலும் போராட்டம் நடத்தலாம் எனக் கூறியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்கள் செல்லாது என அறிவிக்கக்கோரிய மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்தே தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விவசாயிகள் போராட்டம் குறித்து இன்றும், சட்டங்களின் செல்லுபடித் தன்மை குறித்துப் பிறகும் விசாரிக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
போராட்டத்தால் சாமான்ய குடிமக்களின் நடமாட்ட உரிமை பாதிக்கப்படாதவாறு அரசு அதை நெறிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மத்திய அரசும் விவசாயிகளும் பேச்சு நடத்த வேண்டும் என்றும், நடுநிலையான சுதந்திரமான குழு அமைத்து அதனிடம் தங்கள் பக்கத்தின் நியாயத்தை எடுத்துரைக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஏற்கக் கூடிய தீர்வை அந்தக் குழு வழங்கும் வரை போராட்டம் தொடரலாம் என்றும், அதே நேரத்தில் வன்முறை இல்லாமலும், சாலைகளை மறிக்காமலும் போராட்டம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். பேச்சு நடத்துவதன் மூலம் தான் சிக்கல் தீருமேயொழிய வெறும் போராட்டத்தால் தீர்வு காண முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
"We are also Indian, we're familiar with the plight of farmers and are sympathetic to their cause. You (farmers) have to only alter the way the protest is going. We will ensure you can plead your case & thus we are thinking of forming a committee," says CJI on farm laws matter pic.twitter.com/a8CIeYNaKF
— ANI (@ANI) December 17, 2020
Comments