ஜி.பி.எஸ், ஒளி எதிரொளிப்பு பட்டை தொடர்பான புதிய விதிமுறைகளால் லாரிகளுக்கு எஃப்.சி. எடுக்க முடியவில்லை -லாரி உரிமையாளர் சம்மேளனம் புகார்
ஜி.பி.எஸ், ஒளி எதிரொளிப்பு பட்டை தொடர்பான புதிய விதிமுறைகளால் லாரிகளுக்கு எஃப்.சி. எடுக்க முடியவில்லை என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் புகார் அளித்துள்ளது.
போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு அளித்த பின்னர் பேட்டியளித்த லாரி உரிமையாளர் சம்மேளத்தினர், 100 கம்பெனிகளிடம் ஜிபிஎஸ் கருவி வாங்க அனுமதி உள்ள நிலையில் 4, 5 நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டுமென கூறுவதாகவும், ஒளி எதிரொளிப்பு பட்டை வாங்க 11 நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் கூறினர்.
ஆனால், இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் , லாரிகளுக்கு எப்ஃசி வழங்குவதில் பிரச்சனைகள் இருப்பதாக சில சங்கத்தினர் கூறுவது தவறான தகவல் எனவும் போக்குவரத்து இணை ஆணையர் பொன்.செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.
Comments