அண்ணா பல்கலை.யில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை - சுகாதாரத்துறை

0 1703

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக யாரும் கொரோனாவுக்கு பாதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

15-ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணாக்கர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து,  நேற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 250 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 3 வளாகங்களிலும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments