இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் குடும்பத்துடன் முற்றுகையிட்டனர்.
இலங்கைக் கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 29 பேர் அங்குள்ள தனிமை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரின் செயலைக் கண்டித்தும், மீனவர்களையும் படகுகளையும் மீட்டுவரக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளதால் நானூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே மீன்வளத் துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டுக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments