ஈரோடு ஸ்ரீபதி அசோசியட்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு : கணக்கில் வராத ரூ.20 கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

0 1328
ஈரோடு ஸ்ரீபதி அசோசியட்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டு நிறைவு : கணக்கில் வராத ரூ.20 கோடி ரொக்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

ஈரோட்டைச் சேர்ந்த ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற ஐடி ரெய்டு, நான்காவது நாளான இன்று காலை நிறைவடைந்தது.

வரி ஏய்ப்புப் புகார் தொடர்பாக, அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபம், பங்குதாரர்களின் வீடுகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள், லாக்கர்களிலும் சோதனை நடைபெற்றது.

அலுவலகங்கள், வீடுகள், வங்கி லாக்கர்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய 10 பெட்டிகளை மூன்று கார்களில் நேற்று இரவு வருமானவரித்துறையினர் எடுத்துச் சென்றனர். மேலும் 20 கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments