தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை ஆய்வுத் துறை

0 3622
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை ஆய்வுத் துறை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இன்றுமுதல் 4 நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இன்று முதல் மூன்று நாட்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், பல இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உட்புற மாவட்டங்களில் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் 20 அன்று தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments