புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை வரும் 31ஆம் தேதிக்குள் முடிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, சென்டாக் தகவல் கையேட்டில் குறிப்பிட்டுள்ள படியே அரசு ஒதுக்கீடு, இடஒதுக்கீடு ஆகியவை இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு பெறும் கோப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள்ஒதுக்கீடு கோப்பு ஆகியவற்றை ஒப்புதல் பெற அரசு முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மருத்துவக் கட்டணம் கடந்தாண்டு நிர்ணயித்த கட்டணமே தொடரும் என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
Latest on medical seats admissions in Puducherry...https://t.co/7qKQBaGNPU
— Kiran Bedi (@thekiranbedi) December 16, 2020
Comments