நிலவில் இருந்து பாறைத்துகள் மற்றும் மணல் மாதிரிகளை சேகரித்து பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்
நிலவில் இருந்து பாறைத்துகள் மற்றும் மணல் மாதிரிகளை சேகரித்த சீன விண்கலம் பூமிக்குத் திரும்பியுள்ளது.
நிலவில் இருந்து பாறை துகள்கள், மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காக சீனா சேஞ்ச்5 என்ற விண்கலத்தை கடந்த மாதம் 24-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
கடந்த 1ம் தேதி நிலவைச் சென்றடைந்த சேஞ்ச் 5ல் இருந்த லேண்டர் அசென்டர் பாறைத்துகள்களைச் சேகரித்தது. இந்நிலையில் இந்த விண்கலம் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் பூமிக்கு திரும்பியதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Comments