இங்கிலாந்தில் இயக்கிப் பார்க்கப்பட்ட உலகின் அதிவேகக் கார்
உலகின் வேகமாகச் செல்லும் கார் இங்கிலாந்தில் இயக்கிப் பார்க்கப்பட்டது.
அமெரிக்காவின் டெக்ஸாசைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஹென்னஸி நிறுவனம் புதிய அதிவேகக் காரினை தயாரித்துள்ளது.
2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக் கொண்ட அந்தக் கார் ஹென்னஸி வெனம் F5 என்று பெயர் சூட்டப்பட்டது.
இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட வெனம் F5 மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு உலகின் அதிவேகமான கார் என்ற பெருமையைப் பெற்றது.
ஏற்கனவே இந்தச் சாதனையைப் படைத்திருந்த புகாட்டி நிறுவனத்தின் சிரான் காரின் சாதனையை வெனம் எஃப் 5 முறியடித்துள்ளது.
Comments