இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டதாரிகளின் தரவரிசை பட்டியல்.... அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு

0 24067

இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டதாரிகளில் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்பை பொறுத்தவரை முதல் பருவத்தில் இருந்து சிறப்பாக செயல்படும் மாணவர்கள் பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெறுவார்கள்.

இந்நிலையில், கடந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்பை முடித்த பட்டதாரிகளாக வெளியேறும் மாணவர்களில் பல்கலைக்கழக தரவரிசையில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இதில் தனியார் கல்லூரி மாணவர்களே அதிகமாக இடம்பிடித்துள்ள நிலையில், அரசு பொறியியல் கல்லூரியில் 3 மாணவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments