சித்ரா வாழ்வில் சிக்கு புக்கு விளையாடிய காதல்..! மாமனார் ஆடியோவால் திருப்பம்

0 429214

காதல் கணவர் ஹேம்நாத், தன்னை சித்ரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசிய குரல் பதிவை ஆதாரமாக கொண்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லை - கதிரின் சீரியல் காதலால், நிஜ வாழ்க்கை சீரியஸ் ஆன பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

சின்னத்திரை நடிகை சித்ராவின், தற்கொலைக்கு காரணமான நிஜ காதலன் கணவன் ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்த நிலையில் சீரியலிலும், நிஜத்திலும் காதல் கொண்ட சித்ராவின் சிக்கு புக்கு ஆட்டத்தால் ஆத்திரம் அடைந்த ஹேம்நாத் அவருக்கு கொடுத்த நெருக்கடிகள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் தொழில் அதிபர் என நம்பி ஹேம்நாத்தின் காதல் வலையில் விழுந்துள்ளார் நடிகை சித்ரா..!

சீரியலில் முல்லை - கதிராக ஜோடிகட்டிய சித்ராவும், குமரனும் நடன திறமையை காட்டுவதற்காக காட்டிய நெருக்கம் அவர்களுக்குள் இறுக்கமாகி விடுமோ என்று சந்தேகம் கொண்ட ஹேம்நாத் சித்ராவை கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளான்.

நடன நிகழ்ச்சியில் வரவேற்பு பெற்ற முல்லை - கதிர் ஜோடிக்கு இடையே விரிசல் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. கதிர் திருமணமானவர் அதனால் அவருடன் இனி தன்னால் ஆட முடியாது என்று முல்லையின் வாயால் பலரது முன்னிலையில் சொல்ல வைத்து சீரியல் காதலை சீரியசாக பிரித்து வைத்துள்ளான் ஹேம்நாத்

இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது பிரிவு குறித்த ஆதங்கத்தை பகிர்ந்து கொண்ட நிலையில் , நடன நிகழ்ச்சியில் குமரன் - சித்ராவுக்கு இடையே ஏற்பட்ட பிரிவால் சீரியல் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று சம்பந்தபட்ட குழுவினர் மீண்டும் அவர்களை டிக்டாக் மூலம் சேர்ந்து வைத்துள்ளனர்

அதன் பின்னர் தான் ஹேம்நாத்துக்கு ஷாக் கொடுக்கும் விதமாக கதிர் முல்லைக்கு முதல் இரவு காட்சி தொடங்கி, முத்தக்காட்சி வரை வைத்து அந்த சீரியல் இயக்குனர் புரட்சி செய்துள்ளார்

இதற்கிடையே சித்ராவுக்கும் ஹேம் நாத்துக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் பதிவு திருமணம் செய்து கொண்ட பின்னர் சித்ராவின் சீரியல் வாழ்வில் அதிகமாக தலையிட்டுள்ளார் ஹேம்நாத்

ஏற்கனவே வீடு கட்ட வாங்கிய கடன், கடனில் வாங்கிய ஆடிக்கார் என பல கடன்களும் கழுத்தை இறுக்கிய நிலையில் கணவன் ஹேம்நாத்தின் டார்ச்சர் எல்லை மீறியுள்ளது. ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க வேண்டாம் என்று தடை போடும் நிலைக்கு சென்றுள்ளான். இதையடுத்து மாமனார் ரவிச்சந்திரனிடம் செல்போனில் பேசிய சித்ரா, இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஹேம்நாத் செய்யும் டார்ச்சர்கள் குறித்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார்

இந்த குரல் பதிவு சித்ராவின் செல்போனில் பதிவாகி இருந்த நிலையில் ஹேம்நாத் அதனை அழித்தது சைபர் குற்ற பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ரெகவரி சாப்ட்வேர் மூலம், அவர் பேசிய குரல் பதிவுகளை மீட்ட காவல்துறையினர் அந்த குரல் பதிவில் சித்ரா தனது மாமனாரிடம் தெரிவித்த புகார்களை ஆதாரமாக கொண்டு ஹேம்நாத்தை கைது செய்ததாக தெரிவித்தனர்.

மாமனார் செல்போனில் உள்ள அழைப்பு விவரங்கள் மூலம் சித்ரா அவருடன் பேசி இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதற்கிடையே யாரையோ காப்பாற்ற தன் மகனை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக ஹேம்நத்தின் தந்தை ரவிச்சந்திரன் கூறி இருப்பது விவகாரத்தை திசை திருப்பும் செயல் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் 5 க்கும் மேற்பட்ட பெண்களுடன் காதல் கொண்டவர் என்பதும் பல பப்புகளில் விடிய விடிய போதையில் பொழுது போக்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் ஹேம்நாத் கொடுத்த தொல்லைகள் குறித்து அவருடன் பணியாற்றிய நண்பர்களிடம் சித்ரா தெரிவித்ததாக கூறப்படுவதால் தற்போது நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. அவர்களை இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக சேர்ப்பதற்கு காவல்துறையினர் முயற்சி எடுத்து வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேம்நாத்தை ஆர்.டி.ஓ விசாரணைக்காக அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளனர்.

ஹேம்நாத் கொத்தாக தொல்லைகள் தந்தாலும், சிரித்த முகத்துடன் சித்தாக வலம் வந்த சித்ராவின் தற்கொலை தொடர்பான விசாரணை முடிவில் தடயங்களை மறைத்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments