2021 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை வெளியிட்டது TNPSC

0 194631
2021 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி குரூப் 1 தேர்வு ஜனவரி மூன்றாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 2 மற்றும் குரூப்-2A தேர்வுக்கு மே மாதமும், VAO, குரூப்-4 தேர்வுக்கு செப்டம்பர் மாதமும் அறிவிப்பாணை வெளியிடப்பட உள்ளது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக 2020 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த குரூப் 1, குரூப்2,2ஏ, குரூப் 4,விஏஒ, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

புதிய காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடைபெறுமா? தேர்வர்களின் வயது வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? என்பன உள்ளிட்ட விவரங்களை தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிடும் போது அதில் TNPSC தெளிவாக குறிப்பிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments