கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை - பினராயி விஜயன்

0 6448
கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை - பினராயி விஜயன்

கேரளா உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான இடங்களில் ஆளும் கட்சியின் இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

மாலை 6 மணி நிலவரப்படி500க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள், 6ல் 3 மாநகராட்சிகள், 14ல் 10 மாவட்ட ஊராட்சிகள், 86ல் 35 நகராட்சிகளையும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி கைப்பற்றியுள்ளது.

காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 3 மாநகராட்சிகள், 45 நகராட்சிகள், 4 மாவட்ட ஊராட்சிகள் கிடைத்துள்ளன. தன் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியையும் பாஜக கூட்டணி இழந்த நிலையில், பந்தளம் உள்பட 2 நகராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது.

அரசுக்கு எதிரான காங்கிரஸ் கூட்டணியின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை என்பதை இந்த வெற்றி உணர்த்தி இருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments