தமிழகத்தில் 3 மாதங்களில் லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 127 சோதனைகளை நடத்தியதில், லஞ்சம் பெற்ற அரசு அதிகாரிகள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனைகளின்போது கணக்கில் வராத 7 கோடி ரூபாய், 7 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி, 10 காரட் வைரம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அலுவலகங்களிலும், அவற்றில் பணியாற்றுவோர் வீடுகளிலும் நடந்த சோதனைகளில் அதிக அளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, சார்பதிவாளர் அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் ஆகியவற்றில் நடந்த சோதனைகளில் அதிகாரிகள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
Comments