சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் நடிகர், நடிகைகளிடமும் விசாரணை

0 4586
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் கோட்டாச்சியர் முடிவு செய்துள்ளார்.

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் கோட்டாச்சியர் முடிவு செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் கோட்டாச்சியார் திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார். சித்ராவின் தாய்-தந்தை, ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாய் வசந்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை அதிகாரிகள் நாளை ஹேம்நாத்தை, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாச்சியர் முன்பு ஆஜர்படுத்த உள்ளனர். இதற்கிடையே சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த கோட்டாச்சியர் முடிவு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments