சர்க்கரை ஏற்றுமதி மானியம் நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்- மத்திய அரசு
சர்க்கரை ஏற்றுமதி மானியம் நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஒரு டன்னுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம், 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி மானியம் வழங்கப்பட இருப்பதாக கூறினார். இதன் மூலம் 5 கோடி விவசாயிகளும், சர்க்கரை ஆலைகளில் பணியாற்றும் 5 லட்சம் தொழிலாளர்களும் பயன்பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
அதே போன்று 3 லட்சத்து 92 ஆயிரத்து 332 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஏலம் நடைபெறும் என்றும் கூறினார்.
Comments