ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழை நீரால் கப்பல் போல மிதந்த கார்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிக் கிடக்கும் மழை நீரில், கார் ஒன்று சிக்கி, கப்பல் போல மிதந்தது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மருள் பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கீழ்மட்ட சுரங்கப்பாதையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தகவல் அறிந்து விரைந்து வந்த உள்ளூர் மக்கள், கயிறு கட்டி காரை வெளியே இழுக்க முயன்றனர்., காரில் இருந்தவர்கள் வெளியேறாததால் அசம்பாவிதம் எதுவுமின்றி தப்பினர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக்கிடக்கும் மழை நீரை அகற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments