கேரள உள்ளாட்சித் தேர்தல்... ஆளும் இடதுசாரி முன்னணி வெற்றி
கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி பாதிக்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
பிற்பகல் மூன்றரை மணி நிலவரப்படி மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் இடதுசாரி முன்னணி 515 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 375 இடங்களிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 23 இடங்களிலும், பிறர் 28 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.
152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரி முன்னணி 112 இடங்களிலும், காங்கிரஸ் 40 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
மாவட்ட ஊராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி 10 மாவட்டங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 4 மாவட்டங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 86 நகராட்சிகளில் இடதுசாரி முன்னணி 35 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், பிறர் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர். 6 மாநகராட்சிகளில் நான்கில் இடது முன்னணியும், இரண்டில் காங்கிரசும் முன்னிலை பெற்றுள்ளன.
Comments