பாலத்தின் கீழ் சிக்கிய பிரம்மாண்ட மின்மாற்றி-வெல்டிங் வைக்கும்போது தீப்பிடித்து எரிந்தது

0 40660
சென்னை மதுரவாயலில் மேம்பாலத்தின் கீழ் சிக்கிய பிரம்மாண்ட மின்மாற்றி 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட நிலையில், அதனை வெல்டிங் வைத்து மீட்கும் முயற்சியின்போது தீப்பிடித்து எரிந்தது.

சென்னை மதுரவாயலில் மேம்பாலத்தின் கீழ் சிக்கிய பிரம்மாண்ட மின்மாற்றி 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட நிலையில், அதனை வெல்டிங் வைத்து மீட்கும் முயற்சியின்போது தீப்பிடித்து எரிந்தது.

சென்னை துறைமுகத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் கொண்டு செல்லப்பட்ட அந்த மின்மாற்றியின் மேற்பகுதி மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் சிக்கி நகர முடியாமல் நின்றது.

இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பாலத்தின் சுவற்றில் முட்டி நின்ற மின்மாற்றியின் மேற்பகுதியை வெல்டிங் கொண்டு அகற்றி அதனை வெளியே இழுக்க முயற்சித்தனர்.

அவர்களுடைய முயற்சி வெற்றி பெற்று லாரி ஒருவழியாக அகற்றப்பட்ட நிலையிலும் வெல்டிங் வைக்கப்பட்டபோது மின்மாற்றியில் இருந்த ஆயில் டேங்க் பகுதியில் தீப்பற்றிக் கொண்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments