பழைய கார்களைப் புதுப்பித்து விற்று வாடிக்கையாளர்களிடம் மோசடி... மாருதி சுசுகி வாகன விற்பனையாளரின் உரிமம் பறிப்பு

0 54972

அசாமில் பழைய கார்களுக்கு வண்ணம் பூசிப் புதுப்பித்து ஏமாற்றி விற்ற மாருதி சுசுகி வாகன விற்பனையாளரின் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது.

குவகாத்தியில் போத்தார் கார் வேர்ல்டு என்னும் பெயரில் உள்ள மாருதி சுசுகி வாகன விற்பனையகத்தில் பழைய கார்களைப் புதுப்பித்து விற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாகப் போக்குவரத்து ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அந்த விற்பனையகத்தில் மாவட்டப் போக்குவரத்து அதிகாரி திடீர் ஆய்வு செய்தார். அப்போது பழைய வாகனங்களுக்கு வண்ணம் பூசி அதைப் புதிதுபோல ஆக்கி விற்பனை செய்ததைக் கண்டுபிடித்தனர்.

இதை வாகன விற்பனையாளரும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து வாகன விற்பனையகத்தின் உரிமத்தைப் பறித்துள்ளதுடன், விசாரணை முடியும் வரை எந்த வாகனத்தையும் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments