ரயுகு குறுங்கோளில் இருந்து கொண்டுவரப்பட்ட மண் மாதிரி எதிர்பார்த்ததை விட அதிகம் - ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி

0 7754

ரயுகு குறுங்கோளில் இருந்து ஹயாபூசா-2 விண்கலம் சேகரித்து அனுப்பிய மண் தாங்கள் எதிர்பார்த்ததை விடவும் அதிகம் என்பதால், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பூமியில் இருந்து 30 கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இந்த குறுங்கோளுக்கு 6 வருட பயணம் செய்த ஹயாபூசா-2 விண்கலம், மண் மாதிரிகள் அடங்கிய சிறு பெட்டகத்தை பூமிக்கு அனுப்பியது.

ஆஸ்திரேலிய பாலைவனத்தில் இருந்து இந்த பெட்டகம் ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு திறக்கப்பட்டது. அதிலுள்ள மண் காப்பிகொட்டையை அரைத்தது போல உள்ளது.

அதில் உள்ள கனிமங்களில் இருந்து வெளியாகும் வாயுவையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இந்த மண் மாதிரியில் இருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அண்டம் எப்படி இருந்தது? பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கும் அதற்கும் தொடர்பு உள்ளதா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹயாபூசா 2 மற்றோர் குறுங்கோளை தேடி 11 ஆண்டு பயணத்தை துவக்கி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments