சிஎம்எஸ்-1 செயற்கைக் கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி50 ராக்கெட்-திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுவாமி தரிசனம்
சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு இஸ்ரோ செலுத்திய ஜிசாட்-12 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் தற்போது முடிந்துவிட்டது. எனவே அதற்கு மாற்றாக சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 3.41 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
இதையொட்டி இன்று செயற்கைக்கோள் மாதிரி வடிவமைப்பை ஏழுமலையான் பாதத்தில் வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.
சிஎம்எஸ்-1 செயற்கைக் கோள் சுமார் 1,400 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 7 ஆண்டுகள். இதில் உள்ள விரிவுபடுத்தப்பட்ட சி பேண்ட் அலைக்கற்றைகள் தொலைதொடர்பு சேவையை மேம்படுத்தி வழங்க உதவும். தொலை மருத்துவம், இணையவழிக் கல்வி, பேரிடர் கண்காணிப்பு மற்றும் செல்போன் சேவையை எளிதாக்கும்.
Comments