கேரள உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை: ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி பாதிக்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை

0 3308

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி பாதிக்கு மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 

பகல் பதினொன்றரை மணி நிலவரப்படி மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் இடதுசாரி முன்னணி 487 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 373 இடங்களிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 24 கிராம ஊராட்சிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரி முன்னணி 101 இடங்களிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி 10 மாவட்டங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 4 மாவட்டங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

மொத்தமுள்ள 86 நகராட்சிகளில் இடதுசாரி முன்னணி 40 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 4 மாநகராட்சிகளில் நான்கில் இடது முன்னணியும், இரண்டில் காங்கிரசும் முன்னணியில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments