ஜனவரி இரண்டாவது வாரத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்க தெலங்கானா அரசு முடிவு
அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை துவக்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி எட்டு முதல் 10 நாட்களில் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசியின் முதல் டோசை போட திட்டமிட்டுள்ளதாக மாநில பொது சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த கொரோனா தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
அதே நேரம் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியாவின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தெலங்கான அரசு அதற்கான ஆயத்தப்பணிகளை துவக்கி உள்ளது.
Telangana plans to vaccinate 80 lakh people from mid-January https://t.co/OKKPLLWv7X
— NDTV (@ndtv) December 16, 2020
NDTV's Uma Sudhir reports pic.twitter.com/2XflxIw6d8
Comments