“நவீன கோடாங்கி” உடுக்கை அடித்துப் பாட்டுப்பாடி ஊராட்சித் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே ஊராட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி “நவீன கோடாங்கி” என்ற பெயரில் உடுக்கை அடித்து பாட்டு பாடி, அரசிடம் தங்களுக்கான கோரிக்கை வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
உடல் முழுவதும் சந்தனம், விபூதி, குங்குமம் பூசி கையில் உடுக்கையுடன் கோடாங்கி வேடத்தில் தாதனேந்தல் ஊராட்சித்தலைவரின் கணவர் ராஜேந்திரன் அமர்ந்திருக்க, கோடாங்கியின் உதவியாளராக உத்தரவை ஊராட்சித் தலைவரும் குறி கேட்பவர்களாக லாந்தை, பெருங்களூர் ஊராட்சித்தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.
ஊராட்சிகளுக்கான சிறப்பு நிதியை அரசு வழங்காததால் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படுவதாக ராஜேந்திரன் உடுக்கை அடித்து பாட்டுப் பாடினார்.
Comments