டாடா நிறுவனம், டாடா குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான குடும்பச் சொத்து அல்ல - ஷபூர்ஜி பல்லோன்ஜி

0 2072

டாடா நிறுவனம், டாடா குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமான குடும்பச் சொத்து இல்லை என அதற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமம், உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது.

டாடா குழுமத்தில் ஷபூர்ஜி பல்லோன்ஜிக்கு 18 சதவிகித பங்குகள் உள்ளன. அதை திரும்ப பெறும் விவகாரத்தில், பங்குமதிப்பை நிர்ணயிப்பது தொடர்பாக இரண்டு குழுமங்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையில், சிறிய பங்குதாரர்கள் மீது டாடா குழுமம் ஆதிக்கம் செலுத்துவதாக ஷபூர்ஜி பல்லோன்ஜி தரப்பு குற்றஞ்சாட்டியது.

நானா கார் போன்றவற்றில் தொடர்ந்து முதலீடு செய்வதால் டாடாவின் பணம் விரயமாவதாவும் தெரிவிக்கப்பட்டது. டாடா குழுமத்தின் செயல் தலைவராக இருந்த ஷபூர்ஜி பல்லோன்ஜியின் சைரஸ் மிஸ்திரி கடந்த 2016 ல் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே புகைச்சல் நிலவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments