கேரள சிறுமியின் சாதனையை முறியடித்த தமிழக சிறுமி..! 58 நிமிடங்களில் 46 வகையான உணவுகளை தயார் செய்து அசத்தல்

0 11980
சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை தயார் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவர் 58 நிமிடங்களில் 46 வகை உணவுகளை தயார் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி சான்வி என்பவர் 1 மணி நேரத்தில் 30 வகை உணவுகளை தயாரித்து யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். அந்த சாதனையை சென்னையை சேர்ந்த கலைமகள் என்பவரின் மகளான எஸ்.என். லட்சுமி சாய்ஸ்ரீ (SN Lakshmi Sai Sri) முறியடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவர், தாயார் கலைமகள் உணவு தயாரிக்கும்போது அதை அருகிலிருந்து பார்த்து தாமும் சமையல் செய்ய ஆர்வம் காட்டியுள்ளார். இதை புரிந்து கொண்டு தாயார் கலைமகள், லட்சுமி சாய்ஸ்ரீக்கு பயிற்சி அளித்து தயார்படுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments