முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சுயசரிதையை வெளியிடுவது தொடர்பாக பிரணாப்பின் மகனுக்கும் மகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு

0 1804

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சுயசரிதையை வெளியிடுவது தொடர்பாக பிரணாப்பின் மகனுக்கும் மகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. 

அடுத்த மாதம் வெளியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் புத்தகத்தில் சோனியா காந்தி, மன்மோகன்சிங் , காங்கிரஸ் கட்சி மீதான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளதாக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகின.

தாம் குடியரசுத் தலைவர் பதவியேற்றதும் காங்கிரஸ் கட்சியின் இலக்கின் மீதான கவனம் சிதறிவிட்டதாக பிரணாப் குறிப்பிட்டிருந்தார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

அந்த நூலில் உள்ள தகவல்களை சரிபார்க்க விரும்புவதாக அபிஜித் தமது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.ஆனால் அவர் சகோதரியான சர்மிஷ்டாவோ புத்தக வெளியீட்டைத் தடை செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments