அமெரிக்கக் கடல் பகுதியில் குட்டியுடன் சுற்றித் திரியும் அரியவகை திமிங்கலம்
அமெரிக்கக் கடற்பகுதியில் குட்டியுடன் சுற்றித் திரிந்த அரியவகை திமிங்கலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் என்ற தீவுப்பகுதியில் 50 அடி நீளமும் 50 டன் எடையும் கொண்ட திமிங்கலம் ஒன்று சுற்றித் திரிந்தது.
இதனையறிந்த ஆய்வாளர்கள் ட்ரோன் கேமரா மூலம் அதனைப் படம் பிடித்தபோது, அது வட அட்லாண்டிக் ரைட் திமிங்கலம் என்பதும், மிகவும் அரிதான வகையைச் சேர்ந்ததும் தெரியவந்தது.
மேலும் அந்தத் திமிங்கலம் 15 அடி நீளமுள்ள குட்டியுடன் இருப்பது ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Comments