ஓவைசி கட்சியை மே.வங்கத்தில் போட்டியிட வைக்கிறது பாஜக... முஸ்லீம் வாக்குகளைப் பிரிக்க பலகோடி ரூபாய் இறைப்பதாக மம்தா பானர்ஜி புகார்
பீகார் சட்டமன்றத் தேர்தலில் கணிசமான தொகுதிகளில் வென்ற ஓவைசியின் AIMIM கட்சி மேற்குவங்கத்திலும் போட்டியிடத் திட்டமிடுவதாக தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அக்கட்சியின் மூலம் முஸ்லீம் வாக்குகளைப் பிரிக்க பாஜக பலகோடி ரூபாய் செலவழித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜல்பைகுரியில் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய மம்தா பானர்ஜி இந்துக்களின் வாக்குகளை பாஜகவும் முஸ்லீம் வாக்குகளை ஓவைசி கட்சிகளும் பெற்றுக் கொள்ள திட்டம் தீட்டப்படுவதாக கூறினார்.
Comments